Wednesday, October 17, 2012

உறவுகள்



உறவுகள்
இப்போதெனக்கு
அந்நியமாகவேபட்டன

முன்பை விட
இப்போது நான்
உறவுகளை விட்டு
கொஞ்சம் விலகியேயிருக்கிறேன்

போனா தூக்க
நாலு பேராவது வேணும்
என்பாள் அம்மா

அந்த
நான்குபேருக்காகத்தானா
நமது உறவுகள்?

அந்த நான்குபேரை மட்டும்
இப்போது நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்!

1 திட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்: