நீ இல்லாத நான்
இயல்பாகவே இருக்கிறேன்
எனது சூரியன்
எப்போதும் போல
கிழக்கில் உதித்து
மேற்கில் தான் மறைகிறது
எனது நிமிடம்
எப்போதும் போல
அறுபது நொடிகள் தான்
எனது வானில்
எப்போதும் போலவே
நட்சத்திரங்களும், நிலவும்!
தீ என்னை குளிர்விப்பதில்லை
பனிக்கட்டி என்னை சுடுவதில்லை
இருப்பினும்
என்னால் சொல்ல முடியவில்லை
நீ இல்லாத நான்
நலமென்று!







Nice
ReplyDeleteநன்றி
Delete